ரூ.48 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

அரூர், டிச.18: அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை கால்நடை சந்தை கூடுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சிக்கான அடிமாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்நடைகளை வாங்க வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் மாடுகள் ரூ.6,000 முதல் ரூ.47,000 வரையும், ஆடுகள் ரூ.5,200 முதல் ரூ.10,200 வரையும், நாட்டுக்கோழி ரூ.250 முதல் ரூ.1,100 வரையிலும், சேவல்கள் ரூ.400 முதல் ரூ.1,400 வரையிலும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக நேற்றைய சந்தையில் ரூ.48 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அரூர் வாரச்சந்தையில் இருந்து ஆந்திரா மாநிலம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து எருமை, காளை மாடு போன்றவை இறைச்சிக்காக வாங்குகின்றனர். பின்னர் அவற்றை லாரிகளில் ஏற்றி ஊத்தங்கரை, அனுமந்தீர்த்தம், அரூர் மற்றும் சேலம் வழியாக கேரளாவிற்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் இந்த லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக நெறுக்கமாக ஏற்றிச்செல்கின்றனர். இதுபோன்ற சரக்கு வாகனங்களில் பின்புறம், பக்கவாட்டு பகுதியில் நெம்பர் பிளேட் இருப்பது இல்லை. அதிவேகமாக மனிதாபிமானம் அற்ற முறையில் ஏற்றிச்செல்கின்றனர். தண்ணீர், தீவனம் உள்ளிட்ட யாவும் கொடுப்பது இல்லை. வதைத்து கொண்டு செல்கினறனர். எனவே அதிகாரிகள் ஆய்வு நடத்தி, முறையாக கால்நடைகளை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: