மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருச்செங்கோடு, டிச. 18: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம், இன்று (18ம் தேதி) மாலை 5 மணிக்கு, திருச்செங்கோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்ட அவை தலைவர் நடனசபாபதி தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். பல்லடத்தில் வருகிற 29ம் தேதி நடைபெறும் வெல்லும் தமிழ்ப்பெண்கள் மேற்கு மண்டல மகளிர் மாநாடு குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் சம்பந்தமாகவும் ஆலோசனை நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: