திருச்சி, டிச. 18: திருச்சி விமான நிலையத்தில் விமான நிலைய அலுவலர்களுக்கான பிரத்யேக நுழைவு வாயில் பகுதி செயல்பாட்டுக்கு வந்தது. இதனால் பயணிகள் காத்திருப்பு நேரம் குறைகிறது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று விமான நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் நுழைவு மற்றும் வெளியேற பிரத்யேக நுழைவு பகுதி பயன்பாட்டுக்கு வந்தது.இந்த நுழைவு வாயிலாக விமான நிலையத்திற்குள் தகுந்த நுழைவு அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் விரைவாக தங்கள் பையோ மெட்ரிக் அடையாளத்தை உள்ளிட்டு நுழைய வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இதனால் பயணிகளின் காத்திருப்பு நேரம் குறைவதோடு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் (சிஐஎஸ்எப்) பணிச்சுமையும் குறையும்.விமான நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான நுழைவு வாயிலை திருச்சி விமான நிலைய இயக்குனர் ராஜு மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் மற்றும் தலைமை விமான நிலைய பாதுகாப்பு அலுவலருமான திலீப் ஆகியோர் திறந்து வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் விமான நிலைய அலுவலர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
