கெங்கவல்லி, டிச.18: கெங்கவல்லி அருகே 74.கிருஷ்ணாபுரம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் ஆகாஷ்(23). ஆத்தூர் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மகள் தமிழரசி(23). இருவரும் ஆத்தூர் தனியார் துணிக்கடையில் வேலை செய்த போதிலிருந்து காதலித்து வந்தனர். இந்நிலையில், தமிழரசிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்ததால், இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி, கடந்த 15ம்தேதி ஆத்தூர் காட்டுக்கோட்டை வடசென்னிமலை முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கிரிஜா ராணி இருதரப்பு பெற்றோர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால், தமிழரசியின் பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வராததால், ஆகாஷ் குடும்பத்துடன் தமிழரசியை போலீசார் அனுப்பி வைத்தனர்.
