×

நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் சுயமரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல: இளையராஜா

சென்னை: இளையராஜா இசையமைத்து வெளியான “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இசையமைப்பாளர் இளையராஜா வருகை தந்தார். இதைத் தொடர்ந்து இளையராஜா ஆண்டாள் ரெங்மன்னாரை தரிசனம் செய்ய அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்றபோது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை அர்த்த மண்டபத்திற்கு வெளியே நிற்குமாறு கூறினர்.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அர்த்தமண்டபத்திற்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜாவை வெளியே அனுப்பியதாக சர்ச்சை எழுந்தது. இதனை அடுத்து கோயில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை. அர்த்த மண்டபம் வரை அர்ச்சகர், பரிசாரகர், மடாதிபதிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆண்டாள் கோயிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார். ராமானுஜ ஜீயருடன் அர்த்த மண்டப வாசல்படி ஏறிய போது, அர்த்த -மண்டபம் முன் நின்று தரிசனம் செய்யலாம் என கூறினார். ஜீயர் கூறியதை ஏற்றுக் கொண்டு இளையராஜாவும் அர்த்த மண்டபத்தின் முன் நின்று தரிசனம் செய்தார் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இது தொடர்பாக இளையராஜா தனது சமுக வலைதள பக்கத்தில்;
என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

The post நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் சுயமரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல: இளையராஜா appeared first on Dinakaran.

Tags : Ilayaraja ,Chennai ,Srivilliputhur Andal Temple ,Artha Mandapam ,Andal Rengmannar… ,
× RELATED திருக்குறள் இசையை முடித்தார் இளையராஜா