×

கேரளாவில் இருந்து இறைச்சி கழிவு ஏற்றி வந்த லாரி: போலீசார் விசாரணை


ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். சுகாதார ஆய்வாளர். இவர் நேற்று டூவீலரில் ஒட்டன்சத்திரம்-பழநி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்ற ஒரு லாரியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர், சத்திரப்பட்டி சுங்கக்சாவடி அருகே லாரியை மறித்து நிறுத்தியுள்ளார். பின்னர் லாரியை சோதனையிட்டபோது, அதில் மீன் மற்றும் நண்டு இறைச்சி கழிவுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து, சத்திரப்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

இது தொடர்பாக லாரி டிரைவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த வினு(35) என்பவரிடம் போலீசாரின் விசாரணை நடத்தியதில் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து தூத்துக்குடிக்கு மீன் இறைச்சி கழிவுகளை கொண்டு செல்வதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post கேரளாவில் இருந்து இறைச்சி கழிவு ஏற்றி வந்த லாரி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Lorry ,Kerala ,Ottansatram ,Selvaraj ,Sathirapati ,Ottansatram, Dindigul district ,Ottansatram-Palani road ,Duweiler ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே பழங்கால அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு