×

உலக நன்மை வேண்டி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்

உடன்குடி: உலக நன்மை வேண்டி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து ெகாண்டனர். குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு அரசரடி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 5 மணிக்கு அம்மன், சுவாமிக்கு மகாஅபிஷேகம், 108 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம், மாலை 6 மணிக்கு மகாஹோமம், மஹரிஷி பாரத்வாஜர் வித்யா குருகுல பாடசாலை மாணவர்களின் ஸஹஸ்ர நாமாவளி அர்ச்சனை, மகா சங்கல்பம், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனை, தொடர்ந்து பிரசாதம் வழங்கல், நள்ளிரவு 12 மணிக்கு கற்பூரஜோதி, வாணவேடிக்கை நடந்தது.

புத்தாண்டான நேற்று (1ம் தேதி) காலை 6 மணிக்கு மகாகணபதி, மகாலட்சுமி ஹோமம், தனபூஜை, கோபூஜை, கஜபூஜை, மகாஹோமம், 108 கலச பூஜை, உலக நன்மை வேண்டி மகா தீபாராதனை, சிதம்பரேஸ்வரருக்கு மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடந்தது. காலை 7 மணிக்கு கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வருதல், காலை 8 மணிக்கு அறம்வளர்த்த நாயகிக்கு மகா தீபாராதானையும், தொடர்ந்து உலக நன்மை வேண்டி கோயிலில் இருந்து 1008 பால்குட ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மதியம் 12 மணிக்கு கோயிலை வந்தடைந்தவுடன் அம்மன், சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து 108 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம், 1 மணிக்கு வேதமந்திரம் முழங்க அம்மன், சுவாமிக்கு மகா அலங்கார தீபாராதனை, மதியம் 2 மணிக்கு நையாண்டி மேளம், வில்லிசை, மாலை 3 மணிக்கு 108 சுமங்கலி பெண்கள் குலவையிட கும்மி, மாலையில் அம்பாள் ஊஞ்சல் சேவை, மாலை 6.30 மணிக்கு 1008 மகாதிருவிளக்கு பூஜை, புஷ்ப ஸஹஸ்ர நாமாவளி அர்ச்சனை, இரவு 8 மணிக்கு அம்மன் திருத்தேரில் பவனி, பைரவருக்கு வடமாலை அணிந்து சிறப்பு பூஜை நடந்தது. இந்நிகழ்ச்சிகளுக்கு கோயில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை  காமதேனு குழு அபிஷேக வழிபாட்டு மன்றத்தினர்,  ராஜலட்சுமி குழுவினர் செய்திருந்தனர்.

The post உலக நன்மை வேண்டி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : 1008 milk jug procession ,Kulasekaranpattinam Mutharamman Temple ,Udanukudi ,jug procession ,English New Year ,Kulasekaranpattinam Gnanamoortheeswarar Udanurai ,Mutharamman Temple ,Arasaradi Vinayakar ,1008 ,
× RELATED திசையன்விளையில் தசரா பக்தர்களுக்கு பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள்