×

கதிரியக்கவியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு

 

சேலம், டிச.9: சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கதிரியக்கவியல் துறையின் மூலம், தேசிய அளவிலான கருத்தரங்கு, வருங்கால கதிரியக்கவியல் தொழில்நுட்பம் சார்ந்த தலைப்பின் கீழ் இந்திய கதிரியக்கவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் நாகப்பன் பங்கேற்று தலைமை உரையாற்றினார்.

பல்கலைக்கழகத்தின் கல்வியல் இயக்குனர் பேராசிரியர் ராஜன் சாமுவேல், அங்கீகாரம் மற்றும் தரவரிசை இயக்குனர் பேராசிரியர் ஸ்ரீதர் ரெட்டி, இந்திய கதிரியக்கவியலாளர் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் சங்க செயலாளர் கமாண்டர் டேனியல், சிறப்பு விருந்தினர்கள் பன்னீர்செல்வம், சசிகுமார் ஷெட்டி, பிரசாத், அகிலா, மோனிகா, முரளி கணேஷ் ஆகியோர் பேசினர். இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், தொழில்நுட்பவியலாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தல் போட்டி, படவிளக்க காட்சி போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

The post கதிரியக்கவியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு appeared first on Dinakaran.

Tags : Nationwide ,Department of Radiology ,Salem ,Department of Allied Health Sciences ,Salem Vinayaka Mission University ,Association of Scientists ,Nationwide Seminar ,Dinakaran ,
× RELATED கிரேன் மோதி பெண் பலி