சேலம், டிச.20: சேலம் எருமாபாளையத்தை சேர்ந்தவர் காசி(50). எல்ஐசியில் கிளார்க்காக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 13ம்தேதி இரவு 7 மணியளவில் செல்போனில் பேசிக்கொண்டே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்நேரத்தில் ஒரே டூவீலரில் வந்த 3 பேர், அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், செல்போனை பறித்து சென்றதாக தாதகாப்பட்டியை சேர்ந்த விஜயன்(20), அவரது கூட்டாளிகள் ஹரிபாஸ்கர்(19), விக்னேஷ்(19) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post செல்போனை பறித்து சென்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.