- காங்கிரஸ்
- Jalakandapuram
- யூனியன்
- உள்துறை அமைச்சர்
- அமித் ஷா
- பாஜக
- மோடி
- ராகுல் காந்தி
- சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
- தின மலர்
ஜலகண்டாபுரம், டிச.21: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடும் பாஜ மற்றும் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும், சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில், ஜலகண்டாபுரம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, மாவட்ட பொருளாளர் ரத்தினவேல், நங்கவள்ளி தெற்கு வட்டார தலைவர் லட்சுமணன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், வட்டார, நகர, பேரூர், கிராம கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.
The post காங்கிரசார் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.