×

விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

சேலம், டிச.18: இந்திய விளையாட்டு ஆணையம், சேலம் மாவட்ட சைக்கிள் ஓட்டும் சங்கம் சார்பில் பொதுமக்களிடையே உடல் ஆரோக்கியம், உடற்பயிற்சி செய்வதன் அவசியம், விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், பிட் இந்தியா சைக்கிள் ஓட்டும் பிரச்சாரம், காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்த பேரணியை சேலம் ரோட்டரி சங்க துணைத்தலைவர் ராஜாராம் கொடியசைத்து துவக்கி வைத்தார். காந்தி ஸ்டேடியத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணி தொங்கும் பூங்கா, காந்திரோடு வழியாக அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை சென்று, மீண்டும் காந்தி ஸ்டேடியத்தில் நிறைவு பெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்து கொண்டு, உடல் ஆரோக்கியத்திற்கு சைக்கிள் ஓட்டுவதன் பயன் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேலம் விளையாட்டு ஆணைய உதவி இயக்குனர் மஞ்சுளா, சேலம் மாவட்ட சைக்கிள் ஓட்டுதல் சங்கத்தின் தலைவர் நாசர்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விழிப்புணர்வு சைக்கிள் பேரணி appeared first on Dinakaran.

Tags : Awareness Cycle Rally ,Salem ,Sports Authority of India ,Salem District Cycling Association ,Fit India Cycling Campaign ,Gandhi Stadium ,Dinakaran ,
× RELATED கிரேன் மோதி பெண் பலி