கெங்கவல்லி, டிச.19: கெங்கவல்லி அருகேயுள்ள ஆணையாம்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் செல்வராஜ் (36). இவர் திருப்பூரில் ஜேசிபி இயந்திரத்திற்கு வெல்டிங் வைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்வராஜ் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி ஆகியோர் நேற்று காலை கெங்கவல்லி காவல் நிலையத்துக்கு வந்தனர். திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டனர். பின்னர் அவர்கள் தீக்குளிக்க முயன்றனர்.
இதை பார்த்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றி, இருவர் மீதும் தண்ணீரை ஊற்றினர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் வீட்டின் அருகில் வசிப்பவர், எங்களது நிலத்தில் வீடு கட்டியுள்ளார். இதுகுறித்த வழக்கு 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வீட்டில் சுவர் பூச்சு வேலையை செய்து வருகிறார். இதுகுறித்து புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், மன உளைச்சலடைந்து தீக்குளிக்க முயற்சி செய்தோம் என்றனர். இதையடுத்து போலீசார் செல்வராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் காவல்நிலையத்தில் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.
The post போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளிக்க முயன்ற தம்பதி appeared first on Dinakaran.