×

மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை..! இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 30 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டாடியாவில் ராஜ்கர் கோட்டைக்கு கீழே இருந்த பழமையான சுவர் இன்று அதிகாலை 4 மணியளவில் இடிந்து அங்கு இருந்த வீட்டின் மேல் விழுந்தது. இதில் 9 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 7 பேரில் 5 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

The post மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை..! இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Bhopal ,Rajgarh fort ,Tatia ,Dinakaran ,
× RELATED மத்திய பிரதேசத்தில் மிதமான நில அதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 3.7ஆக பதிவு