- மாபி அரசு மருத்துவமனை
- ராஜ்கர்
- மத்தியப் பிரதேச அரசு மருத்துவமனை
- மாவட்ட அரசு
- மத்தியப் பிரதேசம்
- தின மலர்
ராஜ்கர்: மத்தியப்பிரதேச அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயை திருடர்கள் திருடியதால் புதிதாகப் பிறந்த 12 குழந்தைகள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டது தெரிய வந்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் ராஜ்கர் மாவட்ட அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்து ஆக்சிஜன் சப்ளை செய்ய பயன்படுத்தப்பட்ட 10 முதல் 15 அடி நீளமுள்ள செப்புக்குழாய்களை திருடினர். இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் சப்ளை துண்டிக்கப்பட்டது. அங்கு 12 குழந்தைகள் வைக்கப்பட்டு இருந்ததால் அந்த குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அழத்தொடங்கின. அனைத்து குழந்தைகளும் ஒரே நேரத்தில் அழுததால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து புதிதாக பிறந்த குழந்தைகள் வைக்கப்பட்டு இருந்த தீவிர சிகிச்சை பிரிவில் அலாரம் அடித்ததால் ஆக்சிஜன் சப்ளை துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பேக்கப் ஜம்போ ஆக்சிஜன் சிலிண்டரை விரைவாக இணைத்து குழந்தைகள் உயிரை காப்பாற்றினார்கள். இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
The post மபி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஆக்சிஜன் குழாய் திருட்டு 12 குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் appeared first on Dinakaran.