- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தயாநிதி மாறன்
- மக்களவை
- புது தில்லி
- சென்னை
- கன்னியாகுமாரி
- திமுக
- மத்திய புவி அறிவியல் அமைச்சகம்…
- தின மலர்
புதுடெல்லி: வானிலையை துல்லியமாகக் கணிக்கும் வகையில் தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரிவரையிலான அபாயகரமான கடலோரப் பகுதிகளில் கூடுதலாக புதிய ரேடார்கள் எப்போது அமைக்கப்படும் என்று மக்களவையில் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். மக்களவையில், ஒன்றிய புவி அறிவியல் துறை அமைச்சகத்திடம் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள் வருமாறு:
* தமிழ்நாட்டில் இயங்கிவரும் வானிலை முன்னறிவிப்பு மையங்களின் எண்ணிக்கை எவ்வளவு? குறிப்பாக கடலோரப் பகுதிகளில் எத்தனை மையங்கள் உள்ளன?
* தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரிவரையிலான அனைத்துக் கடலோரப் பகுதிகளிலும் கூடுதலாக வானிலை முன்னறிவிப்பு மையங்களை அமைப்பதற்கானத் திட்டங்கள் ஏதேனும் உள்ளனவா? அவ்வாறெனில் அந்தப் புதிய வானிலை மையங்கள் எப்போது அமைக்கப்படும்?
* நாடெங்கும் 56 புதிய ‘டாப்ளர் ரேடார்கள்’ அமைக்கவுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது உண்மையானால், குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான அபாயகரமான கடலோரப் பகுதிகளில் எத்தனை ரேடார்கள் அமைய உள்ளது என்பதைத் தெளிவான எண்ணிக்கையோடு தெரியப்படுத்தவும்?
* தமிழ்நாட்டின் வானிலை முன்னறிவிப்பு உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு எனக் கேள்வி எழுப்பினார்.
* தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் வானிலையைத் துல்லியமாகக் கண்காணிக்கும்வகையில் மேம்படுத்தப்பட்ட புதிய திட்டங்கள் ஏதேனும் பரிசீலனையில் உள்ளனவா?
* தமிழ்நாட்டின் வானிலை முன்னறிவிப்பு மையங்களில் செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி வானிலையைத் துல்லியமாகக் கணிக்கும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுமா என்றும் அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தெரியப்படுத்தவும் எனவும் கேள்வி எழுப்பினார்.
The post வானிலையை துல்லியமாகக் கணிக்க தமிழகத்தில் புதிய ரேடார்கள் எப்போது அமைக்கப்படும்? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி appeared first on Dinakaran.