×

பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

சண்டிகர்: பஞ்சாபில் விவசாயிகள் நடத்திய ரயில் மறியல் போராட்டம் காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியான உத்தரவாதம், வழக்குகள் வாபஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா சார்பில் 3 மணி நேர ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று பஞ்சாபின் பல்வேறு ரயில் நிலையங்களிலும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மோகா, பரித்கோட், கடியன் மற்றும் படாலா உள்ளிட்ட பல இடங்களில் போராட்டக்காரர்கள் ரயில் தண்டவாளங்களை மறித்து போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளின் போராட்டம் காரணமாக பல இடங்களில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது.

The post பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Punjab ,Chandigarh ,Samyukta Kisan Morcha ,Kisan Mazdoor Morcha ,Dinakaran ,
× RELATED டெல்லி நோக்கி பேரணி போராட்டம் ஷம்பு...