×

ஜாபர் சேட் விவகாரத்தில் முடித்து வைக்கப்பட்ட வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்தது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ஜாபர் சேட் விவகாரத்தில் முடித்து வைக்கப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் மறுவிசாரணைக்கு எடுத்தது ஏன் என்று கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம், விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர் சேட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் சங்கர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவில், “சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு தடை விதித்து, அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அதேப்போன்று இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஜாபர் சேட்டுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கவோ அல்லது தீர்ப்பு வழங்கவோ கூடாது என்று இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்றும் மன்மோகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், “ அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட பிறகு, மீண்டும் அதே வழக்கை உயர்நீதிமன்றம் மறுவிசாரணைக்கு எடுத்துக் கொண்டது ஏன் என்ற கேள்வியெழுகிறது. இந்த கோணத்தில் மட்டும் தான் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள, விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post ஜாபர் சேட் விவகாரத்தில் முடித்து வைக்கப்பட்ட வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்தது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Jaffer Seth ,Supreme Court ,New Delhi ,High Court ,Jaffer ,Seth ,Ram Shankar ,Supreme Court… ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான...