- பிரியங்கா காந்தி
- கூட்டுக்குழு
- தேர்தல்
- புது தில்லி
- பாஜக
- மக்களவை
- காங்கிரஸ்
- திமுக
- திரிணாமூல் காங்கிரஸ்
- ஆம் ஆத்மி கட்சி
- சமாஜ்வாடி கட்சி
- ஒரு
புதுடெல்லி: ஒன்றிய பாஜ கூட்டணி அரசு, மக்களவையில் நேற்று முன்தினம் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி,சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இது பற்றி கருத்து கூறிய காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி,‘‘இந்த மசோதா அரசியல் சட்டத்துக்கு எதிரானது. கூட்டாட்சிக்கு விரோதமாக உள்ளது என்றார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினால் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு(ஜேபிசி) அனுப்ப ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரிந்துரை செய்தார். குழுவில் மக்களவை உறுப்பினர்கள் 21 பேரும், மாநிலங்களவையில் உள்ள 10 பேரும் அங்கம் வகிப்பார்கள். மக்களவை சார்பில் குழுவில் இடம் பெற்றுள்ள 21 எம்பிக்களின் பெயர்கள் நேற்று இரவு வெளியிடப்பட்டது.
இதன்படி, காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, மனிஷ் திவாரி,சுக்தியோ பகத்,திமுக சார்பில் டி.எம். செல்வகணபதி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கல்யாண் பானர்ஜி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரியா சுலே ஆகியோரும் குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். பாஜ சார்பில் அனுராக் தாக்கூர், பன்சூரி சுவராஜ், சம்பித் பாத்ரா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவை சார்பில் எம்.பி.க்கள் கூட்டுக் குழுவில் இடம் பெறுவோர் விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால், திரிணாமுல் கட்சி சார்பில் சாகேட் கோகலே,திமுக எம்பிக்கள் பி.வில்சன் உள்ளிட்டோர் அதில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஒரே நாடு,ஒரே தேர்தல் குறித்த ஜேபிசி குழுவில் பிரியங்கா காந்திக்கு இடம் appeared first on Dinakaran.