பெரம்பலூரில் தேசிய தொழு நோய் எதிர்ப்புதின பேரணி-செவிலியர் மாணவிகள் திரளாக பங்கேற்பு

பெரம்பலூர் : பெரம்பலூரில் தேசிய தொழு நோய் எதிர்ப்புதின பேரணி நடைபெற்றது. நர்சிங் கல் லூரி மாணவிகள் 300பேர் பங்கேற்றனர்.பெரம்பலூரில் நேற்று காலை தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் பாலக்கரை யில் தொடங்கிய இந்த பேரணிக்கு பெரம்பலூர் மாவட்ட துணை இயக்கு னர் (தொழுநோய்) டாக்டர் சுதாகர் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட துணை இயக்குனர்கள் (சுகாதாரம்) டாக்டர் செந்தி ல்குமார், (காசநோய்) டாக் டர் நெடுஞ்செழியன், பெர ம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அர்ஜுனன், மாவட்ட பயி ற்சிஅலுவலர் டாக்டர் விவே கானந்தன் மருத்துவமல் லா மேற்பார்வையாளர் அறிவு ஆகியோர் முன்னி லை வகித்தனர். பேரணி யை பெரம்பலூர் சட்டமன் றத் தொகுதி எம்.எல்.ஏ பிர பாகரன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பேரணியில் தொழு நோய், மைக்கோ பாக்டீரியம் லெப் ரே என்ற பாக்டீரியா கிரு மியினால் காற்றின் மூலம் பரவுகிறது. உணர்ச்சியற்ற தேமல், படைபோன்ற தோல் நோய் உள்ளவர்களையோ அல்லதுதொழுநோயினால் உடல் குறைபாடு உள்ளவர் களையோ, அவர்கள் நமது குடும்பத்திலோ அல்லது நமது வீட்டின் அருகிலோ இருந்தால் உடனே அவர்க ளை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங் கள் அல்லது அரசுத் தலை மை மருத்துவமனைகளு க்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அவர்களை அன்பாகவும் நமது குடும்ப உறுப்பினர் போலவும் வேறுபாடு இல் லாமல் உரிய மரியாதை டன் நடத்த வேண்டும். தொ ழுநோய் முற்றிலும் குண மாகக் கூடியது. ஆரம்ப நிலை சிகிச்சை உடல் கு றைபாட்டை ஏற்படுத்தாது. தொழுநோயால் பாதிக் கப்பட்டவர்களை ஒதுக்கக் கூடாது. தேச பிதா மகாத் மா காந்தியின் கனவை நினைவாக்கும் வகையில் தொழு நோய் இல்லாத இந் தியா உருவாக அனைவ ரும் ஒன்றிணைந்து பாடு பட வேண்டும். அனைத்து தரப்பு மக்களிடமும் தொழு நோய் குறித்த விழிப்புணர் வை ஏற்படுத்த வேண்டும்.

தொழுநோய் குறித்த அச்ச த்தைப் போக்க வேண்டும் என்ற காரணங்களை வலி யுறுத்தி நடைபெற்ற இந்த தேசிய தொழுநோய் எதிர் ப்பு தின பேரணி வெங்க டேசபுரம், ரோவர் வளைவு, பாரத ஸ்டேட் வங்கி, வழி யாக மீண்டும் பாலக்கரை யில் வந்து முடிவடைந்தது. இந்த பேரணியில் பெரம்ப லூர் தனலட்சுமி சீனிவா சன் கல்வி நிறுவனங்கள், கிறிஸ்டியன் கல்வி நிறுவ னங்கள் ரோவர் கல்வி நிறு வனங்கள் ஆகியவற்றை சேர்ந்த நர்சிங் மாணவிகள் 300 பேர் கலந்து கொண்ட னர் அனைவரும் கைகளில் விழிப்புணர்வு பதாகைக ளை ஏந்தியபடி சென்றனர்.

Related Stories: