2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து மலேரியா இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்

*விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உறுதியேற்பு

பொன்னமராவதி : வரும் 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து மலேரியா இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உறுதி ஏற்றனர்.
இந்த ஆண்டின் உலக சுகாதார அமைப்பின் சார்பில் நாட்டு மக்களுக்கு மலேரியா நோயை கட்டுப்படுத்துதல் மற்றும் நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என்ற முக்கிய நோக்குடன் செயல்பட உறுதியேற்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்ட நலவழித்துறை பொதுமக்களுக்கு, சுகாதார பணியாளர்களுக்கு, மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வையும், சிறப்பு கூட்டங்களையும் நடத்தி வருகிறது. விழிப்புணர் நிகழ்ச்சியில் மலேரியா பாதிப்பு குறித்தும், மலேரியா காய்ச்சல் வந்தால் நாம் முதலில் என்ன செய்ய வேண்டியுது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், குழந்தைகளை இந்த காய்ச்சலில் இருந்து நன்கு பாதுகாப்பு கொள்ளவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சியில் நேற்று உலக மலேரியா தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெரிசிரம்யா உத்திரவின்படியும், திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுரையின்படியும், பொது சுகாதார மாவட்ட மலேரியன் அலுவலர் வழிகாட்டுதலின்படி பொன்னமராவதி பேரூராட்சியில் உலக மலேரியா தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமை வகித்தார். பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் உத்தமன் முன்னிலை வகித்தார். இதனைத் தொடர்ந்து எனது வீட்டிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ யாருக்கேனும் காய்ச்சல் என தெரிந்தவுடன் அவர்களை மலேரியாவிற்கு ரத்த பரிசோதனை செய்யுமாறு வலியுறுத்துவேன், மலேரிய காய்ச்சல் எனத்தெரிந்தவுடன் அவர்களை பூரண சிகிச்சைக்கு ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவேன், மலேரியா நோய்க்கு சிகிச்சைக்கு ஏற்றுக்கொண்டவர்கள் மாதந்தோறும் ரத்த தடவல் எடுத்து மலேரியா இல்லை என உறுதி செய்யும் வகையில் ஒரு வருடம் வரையில் தொடர் கண்காணிப்பில் இருக்கச்செய்வேன், தண்ணீர் சேமித்து வைக்கும் மேல்நிலை தொட்டிகள், கீழ்நிலைத் தொட்டிகள், சிமெண்ட் தொட்டிகள் மற்றும் கிணறுகளை கொசு புகாவண்ணம் மூடிவைப்பேன், அரசு மேற்கொள்ளும் மலேரியா நோய் கண்காணிப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும், அவற்றை மேற்கொள்ளும் சுகாதாரப்பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன், மலேரிய பரவலை இந்தியாவில் 2027 முற்றிலுமாக ஒழித்து 2030ல் மலேரியா நோய் இல்லாத நாடு இந்தியா என்ற இலக்கினை அடைய பாடுபடுவேன் என உளமாற உறுதிகூறுகின்றேன் என உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் கேசவன், தேவிகா, நல்லதம்பி, வரிதண்டலர்கள் உமாதேவி, லலிதா, கோகுல், சுகாதார மேற்பார்வையாளர்கள் சண்முகம், பன்னீர் செல்வம் மற்றும் கிரீன் சர்வீஸ் வினோத், சதீஸ் பரப்புரையாளர்கள், நாகவள்ளி, சங்கீதா மற்றும் தூய்மை பணியாளர்கள் திடக்கழிவு செயலாக்க பணியாளர்கள் டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து மலேரியா இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் appeared first on Dinakaran.

Related Stories: