வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்தது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.

சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த வருடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது. இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையான அவதிக்கு உள்ளாக தொடங்கி உள்ளது. இந்நிலையில் மே 1 முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசும். அதிகபட்ச வெப்பநிலை 42°C வரை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை 2°C அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட உள் தமிழ்நாட்டில் மே 1 முதல் 4ஆம் தேதி வரை வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்புள்ளது. மே 1ஆம் தேதி தமிழ்நாட்டில் உணர்தல் வெப்பநிலை 115 டிகிரி ஃபாரன்ஹீட்(46 செல்சியஸ்) அளவுக்கு இருக்க வாய்ப்புள்ளது .

The post வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: