சென்னை: பல்வேறு மொழிகளில் ஹீரோயினாக நடித்து வருபவர், கிரித்தி ஷெட்டி. தெலுங்கில் லிங்குசாமி இயக்கத்தில் உருவான ‘தி வாரியர்’, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘கஸ்டடி’ ஆகிய படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டபோது, அதன்மூலம் தமிழுக்கு வந்த கிரித்தி ஷெட்டி, தற்போது தமிழில் நேரடியாக கார்த்தியுடன் ‘வா வாத்தியார்’, ரவி ேமாகனுடன் ‘ஜீனி’, பிரதீப் ரங்கநாதனுடன் ‘எல்ஐகே’ என்கிற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் ‘சூப்பர் 30’ என்ற இந்தி படத்தில் சின்ன கேரக்டரில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இந்நிலையில், மீண்டும் அவர் இந்தி படத்தில் நடிக்க இருப்பதாகவும், மிலாப் மிலன் ஜாவேரி இயக்கத்தில் டைகர் ஷெராஃப்புடன் ஒரு இந்தி படத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது.
இதுபற்றி கிரித்தி ஷெட்டி கூறுகையில், ‘மும்பையில் பிறந்து வளர்ந்தவள் என்பதால், இந்தியில் நடிப்பது எனக்கு வசதியாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்று நினைத்தேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் போல், இந்தியில் பேச கற்றுக் கொண்டு நடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. ஏனெனில், எனக்கு இந்தி தெரியும் என்பதால், ஷூட்டிங்கில் நான் பேச வேண்டிய வசனங்களின் அர்த்தம் நன்கு புரியும். கடந்த ஆண்டு இந்தியில் எனக்கு சில பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், கால்ஷீட் பிரச்னை காரணமாக நான் நடிக்கவில்லை. பாலிவுட்டில் பணியாற்றும் முறை மிகவும் வித்தியாசமானது. அவர்கள் அனைத்து படப்பிடிப்பு ஷெட்யூலையும் ஒன்றாகவே திட்டமிடுவார்கள். தென்னிந்திய சினிமாவில் பிரித்து, பிரித்து நடத்துவார்கள். இதனால், இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பை நான் ஏற்கவில்லை.
