நாகார்ஜுனாவிடம் அறை வாங்கினேன்: இஷா கோபிகர்

ஐதராபாத்: சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இஷா கோபிகர், ‘‘நடிகர் நாகார்ஜுனாவிடமிருந்து நான் கன்னத்தில் அறை வாங்கினேன். நான் அர்ப்பணிப்புடன் ஒவ்வொரு காட்சியிலும் முழுமையாக நடிக்க விரும்புவேன். ஒரு தெலுங்கு படத்தின் அந்தக் காட்சியில் நல்ல முறையில் நடிக்க விரும்பினேன். அந்தக் காட்சியில் நான் கோபத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆனால், அந்தக் காட்சியில் என்னால் அதைச் சரியாக வெளிப்படுத்த முடியவில்லை. அப்போது நாகார்ஜுனா என்னை அறையும்போது, அது எனக்கு வலிக்கவில்லை. அதனால் நான் அவரிடம், ‘நீங்கள் உண்மையாகவே என்னை அறையுங்கள்’ என்று சொன்னேன். அவர், ‘நிச்சயமாகவா? இல்லை, என்னால் முடியாது’ என்றார். நான், ‘எனக்கு அந்த உணர்வு வேண்டும். இப்போது வரை எனக்கு அந்த உணர்வு வரவில்லை’ என்றேன். அதனால் அவர் என்னை அறைந்தார், ஆனால் மெதுவாகவே அறைந்தார். கோபத்தை வெளிப்படுத்த முயற்சிக்கையில் 14 முறை அறை வாங்கினேன். இறுதியில், என் முகத்தில் உண்மையாகவே அறையின் குறிகள் தெரிந்தன. கோபமும் வந்து நடித்தேன்’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: