சென்னை: அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கண்ணை நம்பாதே’ ஆகிய படங்களின் இயக்குனர் மு.மாறன் எழுதி இயக்கியுள்ள புதிய படம், ‘பிளாக்மெயில்’. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜூ அஸ்வினி ஜோடியுடன் ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரிப்பிரியா நடித்துள்ளனர்.
ஜேடிஎஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். இது கிரைம் திரில்லர் ஜானரில் உருவான படமாகும். இதன் டப்பிங் பணிகள் தொடங்கியது. நேற்று ஜி.வி.பிரகாஷ் குமார் பேசினார்.