அன்னப்பன்பேட்டையில் இணைப்பு சாலை அமைக்க கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

தஞ்சாவூர், ஜூலை 22: தஞ்சை மாவட்ட அம்மாபேட்டை வட்டம் அன்னப்பன்பேட்டை விவசாய அணி தலைவர் செல்வராஜ் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜவிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியதாவது:
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் அன்னப்பன்பேட்டையில் பாசன வாய்க்கால் வழியாக நடவு எந்திரம், அறுவடை இயந்திரம், டிராக்டர் வாகனங்கள் முதலியவை செல் செல்வதற்கு 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து புதிய பாலம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த பாலத்தில் தார் சாலை அமைக்காமல் செம்மண் கொண்டு இருபுறமும் அமைத்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் நிதி ஒதுக்கவில்லை என தெரிவித்தனர். எனவே பாலத்திற்கும் சாலைக்கும் இணைப்பு சாலை அமைக்க பொது நிதி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

The post அன்னப்பன்பேட்டையில் இணைப்பு சாலை அமைக்க கலெக்டரிடம் பொதுமக்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: