நிலக்கடலை, சோளம் சாகுபடிக்கான மானவாரி நிலங்களை சீர்படுத்த டிராக்டர் உழவு

கந்தர்வகோட்டை, டிச.16: நிலக்கடலை, சோளம் சாகுபடிக்கான மானவாரி நிலங்களை சீர்படுத்த டிராக்டர் உழவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து டிட்வா புயல் உருவாகி மழை பெய்தது இதன் மூலம் நீர்நிலைகளில் தண்ணீர் சேங்கி உள்ளது மேலும் அனைத்து ஆழ்துளை கிணற்றிலும் நீர்மட்டம் உயர்ந்தது இப்பகுதியில் நெல் நடவு, கடலை விதைப்பு போன்ற விவசாய பணியும் மேலும் சோளம் மகசூல் சேகரிப்பும் நடைபெறுகிறது.

தற்சமயம் பெய்த மழையால் பயிர் செய்யமால் இருந்த நிலங்களை மழையால் ஏற்பட்ட ஈரத்தை டிராக்டர் கொண்டு விவசாயிகள் உழவு பணி செய்து வருகிறார்கள். இவர்கள் கூறும்போது கடலை, சோளம் பயிர்செய்ய உள்ளதாக தொிகிறது.

Related Stories: