மாநகர ஆயுதப்படை மைதானத்தில் பயன்படுத்திய 29 வாகனங்கள் ஏலம் போலீஸ் கமிஷனர் தகவல்

திருச்சி, டிச.16: திருச்சி மாநகர போலீஸ் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்கள், வரும் டிச.19ம்தேதி பொது ஏலம் மூலம் விடப்படும் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார். திருச்சி மாநகர போலீஸ் துறையில் பயன்படுத்தப்பட்டு முதிரா நிலையில் கழிவு செய்யப்பட்ட அம்பாசிடர் கார்-1, மார்ச்சுவரி வேன்-1, சாதாரண நிலையில் கழிவு செய்யப்பட்ட டாடா பஸ்-4, டாடா சுமோ விக்டா-6, பொலீரோ ஜீப்-4, டாடா ஸ்பாஸியோ-3, டெம்போ டிராவலர்-1, எய்ச்சர் வேன்-1, எம்.எம்.540 ஜீப்-1, அம்பாசிடர் கார்-1, மினி பஸ்-2 என 26 நான்கு சக்கர போலீஸ் வாகனங்களும், டிவிஎஸ் அப்பாச்சே பைக்-2, பஜாஜ் பல்சர்-1 ஆகிய 3 டூவீலர்களும் என மொத்தம் 29 வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்.

இந்த வாகனங்கள் வரும் டிச.19 தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் விடப்படும். வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் நாளை 16ம்தேதி முதல் டிச.18 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிடலாம். போலீஸ் வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் டிச.19ம்தேதி காலை 8 மணி முதல் 10 மணிக்குள் தங்கள் ஆதார் அட்டையுடன், ரூ. 5 ஆயிரம் முன் பணம் செலுத்தி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகையுடன், அதற்குரிய சரக்கு மற்றும் சேவை வாியாக 18 சதவீதம் செலுத்தி வாகனத்தை பெற்று செல்லலாம் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தொிவித்துள்ளார்.

Related Stories: