திருவாரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவாரூர்,டிச.16: திருவாரூரில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மோகனசந்திரன் கொடியசைத்து துவக்கிவைத்தார். திருவாரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2025-ம் ஆண்டு திட்ட செயலாக்கத்தின் ஒரு பகுதியாக மாவட்ட அளவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி திருவாரூரில் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி விளமல் கல்பாலம் அரசு சுற்றுலா மாளிகையிலிருந்து புறப்பட்ட பேரணியியை கலெக்டர் மோகனச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கூடுதல் கலெக்டர் பல்லவிவர்மா, எஸ்.பி கருண்கரட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகளுடனும், போலீசார் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்கியவாறும் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில் இப்பேரணியானது, கலெக்டரின் முகாம் அலுவலகம் வரை சென்று முடிவுற்றது. நிகழ்ச்சியில் ஆர்.டி.ஒ சத்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: