பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஐ.நா. அமைப்பின் மாணவர் கல்விப் பயணத் திட்டத்தின் கீழ், தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில், வரும் ஆகஸ்ட் 7,8 தேதிகளில் பன்னாட்டு மாணவர் மன்றத்தில், நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து 6 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவர்கள், 3 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பகுதிநேர ஆசிரியர்கள் 8 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். அது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனவே பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: