எஸ்.ஐ.ஆரில் 85 லட்சம் வாக்காளர் நீக்கப்படலாம் தகுதியானவர்களை மீண்டும் சேர்க்கும் பணியில் ஈடுபடுவோம்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: எஸ்ஐஆரில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்றும், தகுதியானவர்களை மீண்டும் சேர்க்கும் பணியில் ஈடுபடுவோம் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் 10% வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68,467 ஆக இருந்த நிலையில் 75,035 ஆக அதிகரித்துள்ளது. அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்காமல் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் ஆணையம் உயர்த்தியது ஏன். தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம். எஸ்ஐஆர் பணிகளின் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் வலுவாக எதிர்த்தது திமுக மட்டும் தான். தகுதியான வாக்காளர்களை மீண்டும் சேர்க்கும் பணியில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: