தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க தலைமை நிர்வாகக்குழுவிற்கு அதிகாரம்: சென்னையில் நடந்த மஜக செயற்குழுவில் தீர்மானம்

சென்னை: மனிதநேய ஜனநாயக கட்சியின்(மஜக) செயற்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மஜக அவைத்தலைவர் சம்சுதீன் நாசிர் உமரி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொருளாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை ஏற்று அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். திருப்பரங்குன்ற விவகாரத்தில் தமிழக அரசுக்கு பாராட்டு. கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி வழங்காத ஒன்றிய அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.

கொள்முதல் நெல்லின் ஈரப்பதத்தை உடனடியாக உயர்த்தி ஒன்றிய அரசு ஆணை வழங்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நேரத்தில் கூட்டணி கணக்குகள் இன்னும் முடியாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இந்நிலையில் தமிழக மக்களின் நலன் சார்ந்து அரசியல் தட்ப, வெட்ப நிலையை ஆய்வு செய்து மனிதநேய ஜனநாயக கட்சி எந்தக் கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்ற முடிவை எடுக்க தலைமை நிர்வாகக் குழுவிற்கு முழு அதிகாரத்தை இச்செயற்குழு வழங்குகிறது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: