போடியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரம்

போடி, ஜூலை 19: போடி அருகே கொட்டகுடி, குரங்கணி உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்களில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேனி வடக்கு மாவட்டம் திமுக போடி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணி தொடர்ந்து மேற்கு ஒன்றியத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே போடி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முன்னாள் போடி சட்டமன்ற உறுப்பினருமான லட்சுமணன் தலைமையில், மீனாட்சிபுரம், மேல சொக்கநாதபுரம், தர்மத்துப்பட்டி, சிலமலை ,ராசிங்காபுரம், அணைக்கரைப்பட்டி கோடாங்கிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக நேரில் சென்று உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் நேற்று போடி அருகே மேற்கு தொடர்ச்சிமலையில் உள்ள முந்தல், கொட்டகுடி, குரங்கணி சுற்றியுள்ள பல்வேறு மலைக் கிராமங்களில் உறுப்பினர் சேர்க்கும் பணியில் திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியின் போது, தேனி வடக்கு மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் ஆஜிப்கான், போடி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் செல்வன் மற்றும் ஒன்றிய திமுகவினர் பலரும் உடனிருந்தனர்.

The post போடியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: