திருப்புத்தூர், ஜூன் 13: திருப்புத்தூர் அச்சுக்கட்டு பகுதியில் நேற்று முன்தினம் மாலை போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது கத்தி மற்றும் வாளுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த அப்பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டியன் (20), விஷ்ணுகுமார் (22) மற்றும் சிங்கம்புணரி ரோடு மூலக்கடை பகுதியில் நின்றிருந்த கணேசன் (20), வீரமுத்து (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து அரிவாள், வாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
The post ஆயுதங்களுடன் சுற்றிய 4 பேர் கைது appeared first on Dinakaran.