கரூர், ஜூன் 6: கரூர் மாவட்டம் புலியூர் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2024-25ம் கல்வியாண்டில் நடந்த அரசு பொதுத் தேர்வில் பள்ளி மாணவ, மாணவிகள் 97 சதவீத வெற்றி பெற்றனர். இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற உமித்ரா, கோகுல் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.பள்ளி தலைமையாசிரியை சிவகாமி தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். அனைத்து ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் செய்திருந்தார்.
The post தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.