கரூர், ஜூலை 23: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஒய்வூதியர் சங்கத்தினர் சார்பில் கருப்பு முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டம் நடத்தப்பட்டது. கருர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். முன்னதாக செயற்குழு உறுப்பினர் சரஸ்வதி வரவேற்றார். சுப்புலட்சுமி, அன்புமணி உட்பட பலர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் கமலக்கன்னி கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினார்.
கோரிக்கை குறித்து மாவட்ட ஒய்வூதியர் சங்க வாசுகி, துணைத்தலைவர் பழனி, காமாட்சி மற்றும் அரசு ஊழியர் சங்க முன்னாள் நிர்வாகி மகாவிஷ்ணன், மாநில துணைத்தலைவர் தனபாக்கியம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிறைவாக மாவட்ட இணைச்செயலாளர் கணேசன் நன்றி கூறினார். வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையாக மாதாந்திர ஒய்வூதியம் ரூ.6750 வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிபடி ஒய்வூதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.
The post அங்கன்வாடி ஒய்வூதியர்கள் ஒப்பாரி போராட்டம் appeared first on Dinakaran.
