கரூர், ஜூலை. 20: 2025-2026 ஆம் ஆண்டுக்கான நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தினை சார்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பிக்கலாமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விளையாட்டுத் துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சார்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 6000 வழங்க தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
குறைந்தபட்ச தகுதி : சர்வதேச / தேசிய போட்டிகளில் முதலிடம் / இரண்டாம் இடம் / மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் (அல்லது) சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். தகுதியான விளையாட்டுப் போட்டிகள்: ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள். அகில இந்திய பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள். இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச / தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள். ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம் இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள்.
வயதுவரம்பு: 2025ம் வருடம் ஏப்ரல் மாதம் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும் தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவராகவும் இருக்கவேண்டும்.
மாத வருமானம்: விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூபாய் 6000க இருத்தல் வேண்டும் (இதற்கான 2025 ஆம் ஆண்டு பெறப்பட்ட வருமான சான்று சமர்ப்பிக்க வேண்டும்). ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் / மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதி இல்லை.விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கவேண்டும்.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: விளையாட்டு சாதனைகளுக்கான சான்றிதழ்கள் வயது மற்றும் அடையாள சான்றிதழ் (ஆதார்) பிறப்பிட சான்று, வருமான சான்று ஓய்வு பெற்றதற்கான விவரங்கள்.
முக்கிய தேதிகள் மற்றும் இடம்: இவ்வலுவலகத்தில் விண்ணப்பிக்க துவக்க நாள் 24.06.2025 கடைசி நாள் மற்றும் நேரம் 31.07.2025 மாலை 5.00 மணி வரை. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலரை 7401703493 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
The post கரூர் மாவட்டத்தில் நலிந்த ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை appeared first on Dinakaran.
