ஆக. 27ம் தேதி சதுர்த்தி விழா விநாயகர் சிலைக்கு வர்ணம் பூசும் பணி

குளித்தலை, ஜூலை 21: ஆக. 27ம் தேதி சதுர்த்தி விழா நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு விநாயகர் சிலைக்கு வர்ணம் பூசும் பணி நடைபெறுகிறது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். தமிழகத்தில் ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சியாக நடைபெறுகிறது. நகர்ப்புறம் கிராமப்புறங்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் பல்வேறு அமைப்பினர் பல்வேறு வகை விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் கரைத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த மாதம் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருவதை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சித்தி விநாயகர், வலம்புரி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் கரூர் மாவட்டம் திருச்சி, கரூர் மணப்பாறை சாலையில் உள்ள மயிலாடி பகுதியில் வந்து இறங்கி உள்ளது. இந்த விநாயகர் சிலைகள் 2 1/2 அடி முதல் 10 அடி வரை உள்ளது.

ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனைக்கு வந்துள்ளது.பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் விநாயகர் சிலைகள் வைக்கும் அமைப்பினர் நகர்ப்புறம் கிராமப்புறத்தில் இருந்து வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்த விநாயகர் சிலை முற்றிலும் ரசாயனம் கலக்காத வர்ணங்களால் வர்ணம் பூசப்படுவதால் மாசு ஏற்படாத வகையில் இருந்து வருகிறது. அதனால் மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

The post ஆக. 27ம் தேதி சதுர்த்தி விழா விநாயகர் சிலைக்கு வர்ணம் பூசும் பணி appeared first on Dinakaran.

Related Stories: