கரூர் ஜூலை 20: தமிழக அரசு காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டுமென அரசு ஊழியர் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 2வது மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட துணைத் தலைவர் திருநாவுக்கரசு மாநில துணைத்தலைவர் விஜயகுமார் முன்னிலை வைத்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சத்திற்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவேண்டும். சத்துணவு அங்கன்வாடி வருவாய்த்துறை கிராம உதவியாளர் சத்துணவு அங்கன்வாடி நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு பணி விதிகளை காலதாமதமின்றி வெளியிடுதல், மருத்துவக்காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களையவேண்டும். கிராம சுகாதா செவிலியர்களுக்கு துணை மையத்திற்கு அனைத்து பதிவேடுகளையும் தமிழக அரசே அச்சிட்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் தனபால் நன்றி கூறினார்.
The post காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்; களப்பணியாளர்களுக்கு ஒத்துழைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.
