இடைப்பாடி, ஜூன் 5: இடைப்பாடி அடுத்த அரசிராமணி பேரூராட்சி குள்ளம்பட்டி ஏரிக்கரை அருகில், பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் மண் கொட்டி சமன்படுத்தப்பட்டதால் டிரான்ஸ்பார்மர் தாழ்வாக உள்ளது. இதனால் கால்நடைகள் மேய்ச்சலின் போது, மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளதால், மின்வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு, டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் கம்பி வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர் appeared first on Dinakaran.