இது தொடர்பாக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருந்து வாங்குவதற்காக பெரிய வரிசை இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. இதுகுறித்து விசாரிக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். உடனடியாக அதிக வரிசை ஏற்படுத்தி கூட்ட நெரிசலை தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் மணி சீர்செய்தார். அரசு மருத்துவமனையை பொதுமக்கள் தற்போது அதிகம் பயன்படுத்துவதே இதற்கு காரணம்.
கடந்த ஆட்சியில் இம்மருத்துவமனையை பயன்படுத்திய வெளிநோயாளர்களின் எண்ணிக்கை 1000 பேர் (நாள்தோறும்) ஆனால் தற்போது வெளிநோயாளர்களின் எண்ணிக்கை 3000 பேர் (நாள்தோறும்). மேலும் இதய நோயாளிகளும், நரம்பியல் நோயாளிகளும் 15 நாட்கள் மாத்திரை வாங்குவதற்கு காலை 10 மணிக்கு மேல்தான் வருகிறார்கள். ஆகையால் சற்று கூட்டம் அதிகமாக காணப்படுகின்றன. எனவே மருந்தகங்கள் கவுன்டர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தி கூட்ட நெரிசலை சீர்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் தற்போது 5 மருந்தக கவுன்டர்கள் வைத்து 9 முதல் 10 மருந்தாளுநர்கள் மூலமாக மாத்திரைகளை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 2 கவுன்டர்கள் புதிதாக தொடங்கப்பட உள்ளது. அத்துடன் நோயாளிகள் சிரமப்படாமல் இருப்பதற்காக குளிர்சாதன வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் உள்ளது.
The post மருந்து வாங்கும் கூட்டத்தை சீர்படுத்த புதிதாக 2 மருந்தக கவுன்டர்கள்: ஓமந்தூரார் மருத்துவமனை தகவல் appeared first on Dinakaran.