அகண்ட இந்தியா கனவை நனவாக்க மோடி தவறி விட்டார்: உத்தவ் சிவசேனா கடும் குற்றச்சாட்டு

மும்பை: “அகண்ட இந்தியா கனவை நனவாக்க பிரதமர் மோடி தவறி விட்டார்” என உத்தவ் சிவசேனா கடுமையாக தாக்கி உள்ளது. உத்தவ் சிவசேனா கட்சியின் நாளிதழான சாம்னாவில் வௌியான தலையங்கத்தில், “சாவர்க்கர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முதல் ராமேஸ்வரம் வரையிலும், சிந்து நதி முதல் அசாம் வரையிலும் பிரிக்கப்படாத அகண்ட இந்தியாவை கனவு கண்டார். இந்தியா – பாகிஸ்தான் போர் இன்னும் நான்கு நாள்கள் நடந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கராச்சி, லாகூர் ஆகியவற்றை இந்திய படைகள் கைப்பற்றி இருக்கும். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த விளையாட்டை கெடுத்து விட்டார். ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்கு முன், இந்தியா குறைந்தபட்சம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்ப பெற்று பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானை பிரித்திருக்க வேண்டும். பிரதமர் மோடியும், அவரது அரசாங்கமும் சாவர்க்கரின் அகண்ட இந்தியா என்ற கனவை நனவாக்க தவறி விட்டனர். சாவர்க்கரின் பெயரில் அரசியல் செய்ய பிரதமர் மோடிக்கு இனி எந்த உரிமையும் இல்லை” என காட்டமாக விமர்சித்துள்ளார்.

The post அகண்ட இந்தியா கனவை நனவாக்க மோடி தவறி விட்டார்: உத்தவ் சிவசேனா கடும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: