சேலம், மே 13: சேலம் சீலநாயக்கன்பட்டி சுடுகாடு அருகில், டாரஸ் லாரியில் மணல் கடத்தப்படுவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். எந்தவித அனுமதியும் இல்லாமல் மணல் கொண்டுவந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 4 யுனிட் மணலுடன் டாரஸ் லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் அடிக்கரையை சேர்ந்த முனியப்பன்(48), தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த உரிமையாளர் செந்தில்குமார்(55) ஆகியோரை கைது செய்தனர்.
The post டாரஸ் லாரியில் மணல் கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.