ஆக்கிரமிப்பு உள்ளதா? கோயில் நிலம் ஆய்வு

 

சேலம், மே 8: சேலம் டவுன் ஆனந்தாபாலம் அருகில் லட்சுமி நாராயண சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலம் எங்கெங்கு உள்ளது. கோயிலை சுற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என திரு தொண்டர்கள் சபை சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து, கோயிலை சுற்றிலும் நிலத்தை அளவிட்டு ஆக்கிரமிப்பு உள்ளதா? என ஆய்வு செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து நேற்று இந்து சமய அறநிலையத்தறைஅதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் கோயில் பகுதி முழுவதும் நிலம் அளவீடு செய்யப்பட்டது. மேலும், அப்பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ள பகுதிகள் கண்டறிந்து குறியீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை அளிக்கப்பட்டதும், ஆக்கிரமிப்பு உள்ள பகுதிகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஆக்கிரமிப்பு உள்ளதா? கோயில் நிலம் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: