திமுக பூத் கமிட்டி கூட்டம்

 

ஈரோடு, மே 6: ஈரோடு மத்திய மாவட்ட திமுக பெருந்துறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சுள்ளிப்பாளையம், பட்டக்காரன்பாளையம், குள்ளம்பாளையம், பொன்முடி, கம்புளியம்பட்டி, மூங்கில்பாளையம், விஜயபுரி மற்றும் மேட்டுப்பதூர் ஆகிய 8 ஊராட்சிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் தலைமை தாங்கினார்.
தெற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட பொறுப்பாளர், திமுக அரசின் 4 ஆண்டு கால சாதனைகள் பட்டியலிட்டு பேசினார். மேலும் ஒவ்வொரு பூத் கமிட்டி முகவருக்கும் கழக துண்டு அணிவித்து கட்சி பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள், பெருந்துறை தெற்கு ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக பூத் கமிட்டி கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: