மங்கலம்பேட்டை அருகே திடீர் கனமழையால் நனைந்த 10 ஆயிரம் நெல் மூட்டைகள்

மங்கலம்பேட்டை, மே 6: மங்கலம்பேட்டை அருகே திடீர் கன மழையால் 3 ஆயிரம் நெல்மூட்டைகள் நனைந்தன. கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே உள்ள இலங்கியனூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் பயிர் செய்து விளைவித்த நெல்மணிகளை மூட்டைகளில் விற்பனைக்காக கொண்டு வந்து வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மங்கலம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழையில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், மழைநீர் சூழ்ந்து வெளியேற வழியின்றி குளம் போல் தேங்கியது. இதில் விவசாயிகள் விற்பனைக்காக வைத்திருந்த நெல் முட்டைகளும் நனைந்து சேதமடைந்தன. இதனை பார்த்த விவசாயிகள் தேங்கி நின்ற மழைநீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் 10,000க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் நனைந்துவிட்டதாக விவசாயிகள் வேதனையுடன் கூறினர். இதனால் விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகள் குறைந்த விலைக்கு செல்லும் என்ற கவலையில் இருந்து வருகின்றனர். மேலும் நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க ஷெட்கள் மைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

The post மங்கலம்பேட்டை அருகே திடீர் கனமழையால் நனைந்த 10 ஆயிரம் நெல் மூட்டைகள் appeared first on Dinakaran.

Related Stories: