2024-25ம் நிதியாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் ரூ.1,124 கோடி: நிர்வாக இயக்குநர் தகவல்

சென்னை: கடந்த நிதியாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் ரூ.1,124 கோடி என நிர்வாக இயக்குநர் காமகோடி வெளியிட்டார். சிட்டி யூனியன் வங்கி 2024-25ம் நிதியாண்டிற்கான வருடாந்திர கணக்கு முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி காமகோடி அறிக்கை வெளியிட்டார். வங்கியின் மொத்த வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 14சதவீதம் உயர்ந்து ரூ.1,18,592 கோடியாக அதிகரித்துள்ளது.

வங்கியின் வைப்பு தொகை 14 சதவீதம் உயர்ந்து ரூ.63,526 கோடியாகவும் மற்றும் கடன்கள் கடந்த ஆண்டைவிட 14சதவீதம் உயர்ந்து ரூ.53,088 கோடியாகவும் உள்ளது. மேலும் வங்கியின் மொத்த லாபம் ரூ.1,679 கோடியாக உள்ளது. அதே சமயம் வங்கியின் நிகர லாபம் 11 சதவீதம் அதிகரித்து ரூ.1,124 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் மொத்த வாராக் கடன் 3.09சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 1.25 சதவீதமாகவும் ஆகவும் உள்ளது. மூலதன விகிதம் 23.75சதவீதமாக உள்ளது. வங்கி இதுவரை 875 கிளைகளையும் 1,736 தானியங்கி பண பட்டுவாடா இயந்திரங்களையும் கொண்டு இயங்கி வருகிறதாகவும் தெரிவித்தார்.

The post 2024-25ம் நிதியாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் ரூ.1,124 கோடி: நிர்வாக இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: