சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், சசிகலா கழுத்தில் துணியால் இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, நேற்று பாஸ்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘பெங்களூருவைச் சேர்ந்த சசிகலாவை, பேஸ்புக் மூலம் காதலித்து பாஸ்கர் திருமணம் செய்துள்ளார். இதனிடையே, ஓசூரில் வேறு ஒரு பெண்ணுடன் பாஸ்கர் தொடர்பு வைத்திருந்ததால், அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது, சசிகலாவின் கை- கால்களை கட்டிப்போட்டு, பாஸ்கர் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த பாஸ்கர், கை-கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் சசிகலாவின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர், கொலையை மறைக்க உடலுறவின்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பிரேத பரிசோதனையில், உடலுறவின் போதே, கழுத்தை நெரித்து சசிகலா கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இதன்பேரில், பாஸ்கர் கைது செய்யப்பட்டார் என தெரிவித்தனர்.
The post தகாத உறவை கண்டித்ததால் மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்து மனைவி கொடூர கொலை: ஜிம் மாஸ்டர் கைது திடுக் தகவல் appeared first on Dinakaran.