ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளக்கேத்தி பகுதியில் மர்மநபர்களால் வயதான தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். ராக்கியப்பன்(75), பாக்கியம் (60) தம்பதியை வெட்டிக் கொன்றுவிட்டு மர்மநபர்கள் தப்பியோட்டியுள்ளனர். தம்பதியரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் விசாரணை செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.