வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பெரிய ‘ளி’ யாக போடுவார்கள் என்று இபிஎஸ் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, ‘’எங்கள் முதல்வர் பார்ட் 2 பாகுபலி போன்றவர். எங்கள் முதல்வர் பீனிக்ஸ் பறவை போன்றவர். எத்தனை தாக்குதல் வந்தாலும் மீண்டும் உயிர்த்தெழுவார். இரும்பு உள்ளம் கொண்டவர். எதற்கும் அஞ்சாதவர். மாநிலத்தின் உரிமையை கனவில்கூட விட்டுக் கொடுக்காத ஒரு முதலமைச்சராக இருக்கிறார். அவர் காட்டுகிற திசையில் அமைச்சராக இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் இயக்க தோழன் என்ற உணர்வோடு பயணிப்போம்’ என்றார்.
திமுகவினரிடம் இருந்து காலனி என்ற சொல் எப்போது அகலும் என்று ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேசியது குறித்தான கேள்விக்கு, ‘’இந்த ஆட்சியில்தான் 4 தாழ்த்தப்பட்டவர்களுக்கு அமைச்சரவையில்முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சராக ஒரு தாழ்த்தப்பட்டவரை முதலமைச்சர் நியமித்திருக்கிறார். காலனி என்ற சொல் நீக்கியத்திற்கு பிறகு மட்டுமல்ல அனைத்து வகையில் சமத்துவமும் காணுகின்ற முதலமைச்சர் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளை அள்ளிக் குவிக்கின்ற ஒரு முதலமைச்சராக இருக்கிறார்.
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திற்கு அதிகமுறை பிரசாரம் மேற்கொள்ள வருவேன் என பிரதமர் மோடி கூறியதாக குறித்த கேள்விக்கு, ‘’நாடாளுமன்றத் தேர்தலின்போது கன்னியாகுமரியில் அமர்ந்து தியானம் செய்தார். ராமேஸ்வரத்தில் தியானம் செய்தார். அவர் ஒவ்வொரு முறையும் வரும்போதும் திமுகவிற்கு குறைந்தபட்சம் 3 சதவீத வாக்குகள் உயர்வைத் தரும். ஆகவே அவர் வரட்டும் வருக என்று நாங்களும் வரவேற்கிறோம்.
நாங்கள் மக்களோடு கூட்டணி வைத்திருக்கிறோம். மோடியை பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை. அவர்கள் யாரை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வரட்டும். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித் துறையை அவர்கள் துணைக்கு வைத்திருக்கிறார்கள். அவர்கள் துணைக்கு அழைக்காத ஒரே ஒரு நிறுவனம் ராணுவம்தான். அதையும் அழைத்து வரட்டும், ஒற்றை இராணுவமாய் முதலமைச்சர் அதனை சந்திக்க தயாராக இருக்கிறார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
The post எத்தனை தாக்குதல் வந்தாலும் பீனிக்ஸ் பறவைபோல் வருவார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.