வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு வணிகவரி அலுவலருக்கு 8 ஆண்டு மனைவிக்கு 4 ஆண்டு சிறை

நெல்லை: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் ஜெயபாலன் (74). இவரது மனைவி கோமதி ஜெயம். ஜெயபாலன் கடந்த 2005- 2006ல் நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்ட துணை வணிகவரி அலுவலராக பணியாற்றினார். அப்போது தளபதிசமுத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக வரி விதிப்பு மதிப்பை திருத்துவது தொடர்பாக ரூ.10 ஆயிரம் லஞ்சமாக பெற்றதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதனைதொடர்ந்து அவரது வீட்டில் நடந்த சோதனையில் வருமானத்துக்கு அதிகமாக அவரது மனைவி கோமதி ஜெயம் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயபாலன், அவரது மனைவி கோமதி ஜெயம் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

லஞ்சம் வாங்கிய வழக்கு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது ஆகிய இரு வழக்குகளும் நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி சுப்பையா விசாரித்து, ஜெயபாலனுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் 4 ஆண்டுகளும் ரூ.50 ஆயிரம் அபராதமும், சொத்து குவித்த வழக்கில் ஜெயபாலன், அவரது மனைவி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவருக்கு ரூ.50 ஆயிரமும், மனைவிக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

The post வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு வணிகவரி அலுவலருக்கு 8 ஆண்டு மனைவிக்கு 4 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: